தமிழகம் முழுவதும் அரவிந்த் கண் மருத்துவமனையின் பெயரும் மருத்துவ சேவைகளும் மிகவும் பிரபலம். உயர்தரமான கண் சிகிச்சைகளை ஏழை-பணக்காரர் வித்தியாசமின்றி அனைவருக்கும் அளித்து வரும் அரவிந்த் கண் மருத்துவமனையில் இணைந்து பணியாற்ற விருப்பமா?
+2 தேர்ச்சியடைந்த மாணவிகளுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய 2 வருட பயிற்சி அளிக்கப்படுகிறது. உச்ச வயது வரம்பு 19.
+2 முடித்த மாணவிகளுக்கு பாதுகாப்பான விடுதி, ஆரோக்கியமான உணவு, பயிற்சிக்கு பிறகு ஊதியத்துடன் கூடிய வேலை, தனித் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஆகிய வசதிகளுடன் கண் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளில் துணை நிற்கும் மாபெரும் வாய்ப்பு.
அரவிந்த் கண் மருத்துவனை வழங்கும் ஈராண்டு செவிலியர் பயிற்சிக்கு எந்த ஒரு கட்டணமும் கிடையாது. +2 முடித்த எந்த ஒரு மாணவியும் பயிற்சியில் சேரலாம். பயிற்சிக் காலத்தில் ஊக்கத் தொகையும் வழங்கப் படும். ஒரே ஒரு நிபந்தனை மட்டுமே… பயிற்சி முடிந்தபின் மூன்றாண்டுகள் அரவிந்த் மருத்துவமனையில் பணி செய்வது கட்டாயம். அந்த மூன்றாண்டுப் பணிக் காலத்திலும் ஊதியம் வழங்கப்படும்.
பயிற்சி மாணவியரைத் தேர்வு செய்யும் நேர்காணல் 30 ஜூலை நடைபெறும்.
நேர்காணலின்போது எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்:-
• +2 மதிப்பெண் பட்டியல் (Original + Xerox copy)
• ஆதார் அட்டை ((Original + Xerox copy)
• Transfer Certificate – TC (Original + Xerox copy).
இந்த செய்தி தங்களுக்கு பயனில்லை என்றாலும் வேறு குழுக்களுக்கு அனுப்பி வைக்கவும். தேவைப்படுவோருக்கு உங்கள் மூலம் பயன் கிடைக்கட்டும்.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க, கீழ்க்காணும் இணைப்பை பயன்படுத்தவும்.