தற்காலிக கணினி இயக்குபவர் பணி நியமன விதிகள் மற்றும் கல்வித் தகுதிகள் :-
1. கணிணி இயக்குபவர் பணியிடத்திற்கு மாதம் 12000/- வீதம் தொகுப்பூதிய அடிப்படையில் திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் தலா ஒன்று வீதம் மொத்தம் நான்கு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
2. இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும்.
3. இப்பணியிடம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். 4. பணி நியமனம் செய்பவருக்குரிய அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆவார் அவரே தகுதியான நபர்களை உரிய முறையில் கணினித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தேர்வு செய்வார்.
5. பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களிடமிருந்து ரூ.20-க்கான முத்திரைத் தாளில் ஒப்பந்தப்பணி பத்திரம் பெறப்படும்.
6. பணியமர்த்தப்படும் பணியாளர் வேலை திருப்திகரமாக இருப்பின் இப்பணியிடத்திற்கு உரிய பணி தொடராணை பெறப்பட்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாள் பணிமுறிவு அளித்து மீண்டும் பணியிடம் புதுப்பிக்கப்படும்.
7. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது எந்தவித முன்னுரிமையோ அல்லது பணி நிரந்தரம் செய்ய கோரவோ இயலாது.
8. இப்பணியிடம் அரசு அனுமதிக்கும் காலம் மற்றும் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் காலம் வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
கல்வித்தகுதிகள் :-
- அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும்.
- கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :-
1. இப்பதவிக்கு 01.10.2022 அன்று குறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு.