First Graduate Certificate அப்ளை செய்யும் போது பெற்றோருடைய சான்றிதழ் இல்லையா ? இதை மட்டும் பண்ணுங்க.
உங்கள் வீட்டில் நீங்கள் முதல் பட்டதாரியா ?
முதல் பட்டதாரி சான்று விண்ணப்பித்து பெறுவதற்கு இந்த சான்று கட்டாயம் இணைத்துவிட வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்படும். கண்டிப்பாக ஒரு குடும்பத்தில் முதல் முறையாக ஒருவர் பட்டதாரி படிப்பை முடித்து இருந்தாள் அவருக்கு கண்டிப்பாக முதல் பட்டதாரி சான்றிதழ் அவசியம் அந்த சான்றிதழை விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் பெற்றோர்களுடைய மாற்றுச்சான்றிதழ் மதிப்பெண் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பித்தால் மட்டுமே அவர்களுடைய விண்ணப்ப சான்று ஏற்றுக்கொள்ளப்படும் என்று அனைவருக்கும் தெரியும். ஆகையால் உங்களுடைய பெற்றோர்கள் படிக்காமல் இருந்தால் அவர்களுக்கு எந்த சான்றிதழை நீங்கள் இணைக்கலாம் என்று உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கலாம். நீங்கள் எங்கும் அலைய தேவையில்லை நீங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் போது பெற்றோருடைய படிப்புச் சான்றிதழை சமர்ப்பிக்கும் இடத்தில் சுய உறுதிமொழி சான்று மட்டும் இணைத்தால் போதும் அந்த சான்றிதழை கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.