-->

திருமண உதவித் தொகைக்கு விண்ணப்பிப்பது எப்படி

 உங்கள் வீட்டுப் பெண்களுக்கு திருமண உதவி தொகை கிடைக்க வேண்டுமா ?


மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் அவர்களின் நினைவாக ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவி திட்டம்.இதில் இரண்டு வகையான திட்டங்கள் உள்ளது.

திட்டம் 1

1, மணப்பெண் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.(Pass+Fail) தொலைதூரக் கல்வியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2, மணப்பெண் பழங்குடியினராக இருந்தால் ஐந்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

இதற்கு 25 ஆயிரம் காசோலை மற்றும் 8 கிராம் தங்கமும் மணப்பெண்ணின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும்.

திட்டம் 2

1, பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூர கல்வி மூலம் அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலும் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதற்கு ஐம்பதாயிரம் ரூபாய் காசோலை மற்றும் 8 கிராம் தங்கமும் மணப்பெண்ணின் பெற்றோர்களிடம் வழங்கப்படும்.

பொது தகுதிகள்

1, ஆண்டு வருமானம் 72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

2, ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

3, திருமண தேதியன்று மணப்பெண்ணுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

தேவையான சான்றுகள்

1, மணப்பெண்ணின் பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல்

2, மதிப்பெண் பட்டியல் நகல்

3, பெற்றோரின் வருமானச் சான்று

4, சாதிச் சான்று

5, திருமண அழைப்பிதழ் 40 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும்.

5, வங்கி கணக்கு புத்தக நகல்.

விண்ணப்ப படிவம்
Previous Post Next Post
close