-->

சேமிப்பு கணக்கில் அதிக வட்டி 7.7 % பெற என்ன செய்ய வேண்டும்?

சேமிப்பு கணக்கில் அதிக வட்டி பெற என்ன செய்ய வேண்டும்?

நீங்கள் சேமிக்க தொடங்கும் தொகையை பொருத்து உங்களால் வட்டி மட்டுமே 1 லட்சம் வரை பணத்தை சேமிப்பதற்காக பொதுவாக மக்கள் வங்கிகளையே நாடுகின்றனர். ஆனால் வங்கியைவிட அதிக வட்டி, அதிக லாபம் தரும் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களைப் பற்றி எவரும் யோசிப்பதில்லை. இந்தியாவின் அஞ்சல் துறை பல நல்ல சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகிறது. மேலும் பயன் தரும் வகையில் பல திட்டங்களை அது உருவாக்கியுள்ளது. எனவே இன்று அஞ்சல் துறையில் இருக்கும் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் பற்றி அறிந்துகொள்ளுங்கள். அஞ்சல் துறை அறிமுகப்படுத்தியுள்ள கிஸான் விகாஸ் பத்திரம் திட்டம். ஆண்டுக்கு 7.7 சதவிகிதம் வட்டியை வழங்குகின்றது. இது 112 மாதங்களில் பணம் இரட்டிப்பாக கிடைக்க வழிவகுக்கின்றது. இந்த கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் 18 வயது நிரம்பிய அனைவரும் தனியாக அல்லது கூட்டாக முதலீட்டினை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் சுய ஆவணங்களைச் சமர்ப்பித்துச் சேமிப்பைத் துவங்கலாம். ஆனால் இதற்கு அதிக மதிப்பிலான தொகையினை முதலீடு செய்யும் போது பான் எண் கட்டாயம் ஆகும். இந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு ஆண்டுக்கு1,50,000 வரை வருமான வரி சட்டப் பிரிவு 80சி கீழ் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யக்கூடிய குறைந்தபட்ச தொகை ரூ .1000. அதிக வட்டி பெறுவது எப்படி? கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ரூ .50,000 முதலீடு செய்கிறீர்கள் என்றால் அது 113 மாதங்களில் முதிர்ச்சியடைந்து தொகை அப்படியே இரட்டிப்பாகும். மேலும் எஸ்பிஐ மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி 10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை விட இந்த திட்டத்தின் வட்டி விகிதம் அதிகம் என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி. 10 ஆண்டு பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 6.25 சதவீதமாக வட்டி வழங்கி வருகிறது எஸ்பிஐ வங்கி. அதே நேரத்தில் எச்.டி.எஃப்.சி வங்கி 6.9 சதவீதமாக உள்ளது. ஆனால் அmஞ்சல் துறையின் இந்த திட்டத்தில் நீங்கள் சேமிக்க தொடங்கும் தொகையை பொருத்து உங்களால் வட்டி மட்டுமே 1 லட்சம் வரை பெற முடியும்.
Previous Post Next Post
close