பணம் சம்பாதிக்க அடுத்த வாய்ப்பு | IRCTC Agent என்றால் என்ன அதன் மூலம் பணம் சம்பாதிப்பது ?

Internet Cafe

நம் இந்தியாவில் இப்போது மக்கள் அனைவரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள் அப்படி ரயில் பயணம் செய்வதற்கு ரயில் டிக்கெட் கண்டிப்பாக எடுக்க வேண்டும். படிப்பறிவு உள்ளவர்கள் மொபைல் மூலம் ரயில் டிக்கெட்டை உடனடியாக விண்ணப்பித்து பெறுவார்கள். ஆனால் படிப்பறிவு இல்லாத நபர்கள் ரயில் டிக்கெட் புக் செய்வதற்கு கடைகளில் சென்று தான் புக் செய்கிறார்கள் இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி IRCTC ஏஜெண்டாக மாறி மாதம் 50 ஆயிரம் மெயில் நீங்கள் சம்பாதிக்கலாம். குறிப்பாக 100-யில் 70 சதவீதம் மக்கள் தங்களது ரயில் பயண டிக்கெட்டை ஆன்லைன் மூலமாக பதிவு செய்து பெற்று கொள்கின்றன.. ஆக நீங்கள் ரயில் டிக்கெட்டுகளை விற்று பணம் சம்பாதிக்கலாம். அது எப்படி என்றால் IRCTC-யுடன் ஏஜென்ட் ஆகவேண்டும் அதை செய்தால் போதும் அதன் மூலம் நீங்கள் பணம் சம்பாதிக்க முடியும்.. வாங்க IRCTC-யுடன் எப்படி ஏஜென்ட் ஆகலாம் என்பதை குறித்து இப்பொழுது நாம் படித்தறியலாம்..

ஏஜென்ட் ஆக இணைவது எப்படி ?

நீங்கள் IRCTC-யில் ஏஜென்ட் ஆக வேண்டும் என்றால் நேரடியாக ஏஜென்ட் ஆக முடியாது.. IRCTC அங்கீகாரம் பெற்ற முன்பதிவு முகவர்கள் பட்டியலிடப்பட்ட முதன்மை முகவர்கள் மூலம்தொடர்பு கொண்டு தான் நீங்கள் IRCTC-யில் ஏஜென்ட் ஆக பதிவு செய்ய முடியும்.. எனவே நீங்கள் சரியான ஏஜென்டை தேர்வு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் https://www.irctc.co.in/eticketing/findAgents.jsf என்ற லிங்கை கிளிக் செய்து ஏஜென்டுகளை தேர்வு செய்துகொள்ளலாம். அதாவது அவற்றில் உங்கள் நகரம் அல்லது பின் குறியீட்டைப் பயன்படுத்தி நீங்கள் ஏஜென்டுகளை சரிபார்க்கலாம். பிறகு அவர்களை தொடர்பு கொண்டு IRCTC-யில் ஏஜென்ட் ஆக பதிவு செய்யலாம்.

இதற்கு தேவைப்படும் ஆவணங்கள்:

  • பான் கார்டு
  • ஆதார் அட்டை
  • மொபைல் எண்
  • மின்னஞ்சல் ஐடி
  • புகைப்படம்.

தேவைப்படும் பொருட்கள்:

உங்களிடம் நல்ல இண்டர்நெட் வசதி இருக்க வேண்டும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், பிரிண்டர், மொபைல் இவை இருந்தால் போதும்.



IRCTC அங்கீகரிக்கப்பட்ட முன்பதிவு ஏஜென்சிக்கான சந்தா கட்டணம்:

பதிவுக் கட்டணங்கள் 1 வருடத்திற்கு ₹ 3,999 ரூபாய் அதுவே பதிவுக் கட்டணம் 2 ஆண்டுகளுக்கு ₹ 5,999 ரூபாய் ஆகும்.

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top