-->

பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் இலவசமாக டிகிரி படிப்பதற்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்த மாணவ மாணவிகள் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவசமாக படிக்க விண்ணப்பிக்கலாம்.


சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் கல்வி திறனை ஊக்குவிக்கும் வகையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு சென்னை பல்கலைக்கழகத்தின் இலவச கல்வி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தின் நோக்கம் : 

தமிழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் சென்னை பல்கலைக்கழக இலவசக் கல்வித் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நடப்பு கல்வி ஆண்டில் இணைப்பு கல்லூரிகள் அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் சுயநிதி கல்லூரிகள் சேர பிளஸ் 2 முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் unom.ac.in என்ற இணையதளத்தில் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

எப்போது விண்ணப்பிக்கலாம் : 

தேர்வு முடிவுகள் வெளியான தேதியிலிருந்து 15 நாட்களுக்குள் unom.ac.in என்ற இணையதளத்தின் மூலம் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகளில் 2022 - 2023கல்வியாண்டில் மாணவர்கள் சேரலாம் என அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பிக்க தகுதிகள் : 

  • முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் மாணவர்கள்.

  •  உடல் ஊனமுற்றவர்கள்.

  •  திருநங்கைகள். 

  • பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற பிள்ளைகள்.

  •  12ஆம் வகுப்பில் 80 சதவீதம் மதிப்பெண் எடுத்தவர்கள்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் மூன்று லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

 இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Previous Post Next Post
close