-->

தமிழக அரசு பெண்களுக்கு இலவச கோழி வழங்கும் திட்டம்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் தமிழக அரசு வழங்க கூடிய பெண்களுக்கான இலவச கோழி வழக்கும் திட்டத்திற்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்வது எப்படி மற்றும் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்க போகிறோம்.

இந்தத் திட்டம் முற்றிலும் பெண்களுக்கு மட்டுமே உள்ள திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் இதற்கு முன்பாக தமிழகத்தில் பல மாவட்டத்தில் உள்ள பெண்கள் பயனடைந்து வருகிறார்கள் தமிழக அரசால் அறிவித்துள்ள இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி ?
 
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்ன : 

1. ஆதார் அட்டை நகல்
2. ரேஷன் அட்டை நகல் 
3. வங்கி கணக்கு நகல் 
4. இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ

இந்த ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் இந்தத் திட்டத்தில் அனைத்து பெண்களும் என்ன வைக்கலாம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கீழே உள்ள விண்ணப்பத்தை தவறு இல்லாமல் பூர்த்திசெய்து அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் கொடுத்து விண்ணப்பிக்கலாம் அல்லது கால்நடை ஆய்வாளரிடம் கொடுக்கலாம். இந்தத் திட்டம் நேரில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பம் பூர்த்தி செய்யும் முறை : 

மேலே உள்ள ஆவணத்தில் தவறு இல்லாமல் பெயர்,தந்தை பெயர்,கைபேசி எண்,ஆதார் எண்,குடும்ப எண்,வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்றால் அதற்கான எண்,உங்க வீட்டு முகவரி,ஊராட்சி ஒன்றியம் பெயர்,குடும்ப உறுப்பினர் விபரம்,முன்னுரிமை கோரும் சிறப்பு பிரிவினராக இருந்தால் அதற்கு உண்டான சான்றிதல் எண் அனைத்தையும் தவறு இல்லாமல் எழுதி உங்களுடைய கையொப்பம் இட வேண்டும்.

 தமிழகத்தில் இந்தத் திட்டத்தை பற்றி பெண்களுக்கு அதிகமாக தெரியாததால் நீங்கள் உங்கள் சுற்று வட்டாரத்திற்கு இந்த பதிவை பகிரவும்.

நன்றி......


Previous Post Next Post
close