மத்திய அரசு வழங்கும் சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பது எப்படி ?
மாணவர்களுக்கு கல்வியை உயர்த்தும் வகையில் மத்திய அரசு சிறுபான்மையினருக்கான கல்வி உதவித்தொகையை வழங்கி வருகிறது இந்த உதவித்தொகைக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்.
ஒன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ மாணவியர் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயன் அடையலாம். கல்லூரி படிக்கும் மாணவ மாணவியரும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு முதல் அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவியரும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அதேபோல் மத்திய அரசு பள்ளியான கேந்திர வித்யாலயா என்ற பள்ளியில் படித்தாலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. ஆதார் அட்டை.
2. சாதி சான்றிதழ்.
3. வருமான சான்றிதழ்.
4. இருப்பிட சான்றிதழ்.
5. வங்கி கணக்கு புத்தகம்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி 15.11.2021
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பிக்கவும்.