காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் புதிதாக ரேஷன் அட்டையை விண்ணப்பித்து பெறுவது எப்படி ?
காதல் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு தமிழக அரசு 2019ஆம் ஆண்டு அவர்களுக்கும் ரேஷன் அட்டையை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தகவல்கள் தமிழகத்தில் நிறைய மக்களுக்கு தெரியாமல் இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் அவர்கள் வீட்டில் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்திருப்பார்கள் ஆகையால் அவர்கள் வீட்டில் உள்ள ரேஷன் அட்டையில் இருவரும் பெயரை நீக்கினால் மட்டுமே புதிதாக ரேஷன் அட்டையை விண்ணப்பித்து பெற முடியும் என அனைவருக்கும் தெரியும்.
யாரிடம் பெறுவது ?
100 ரூபாய் பத்திரத்தில் இருவரும் கோரிக்கை மனு எழுத வேண்டும் அந்த கோரிக்கை மனுவில் இருவரும் சமூகத்தில் நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்கு தனியாக புதிய ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று அந்த பத்திரத்தில் எழுதி இருவரும் கையெழுத்திட்டு அந்தப் பத்திரத்துடன் திருமண சான்றிதழ் ஆதார் அட்டை இருவரிடம் இணைக்க வேண்டும். இந்த கோரிக்கை மனுவை உங்களுடைய மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உணவு துறை அதிகாரி DSO அவரிடம் கொடுத்து கோரிக்கை விட வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
திருமணச் சான்று
ஆதார் அட்டை
இந்த தகவலை தெரியாத நண்பர்களுக்கு பகிருங்கள்.