தமிழக அரசு வழங்க கூடிய தையல் இயந்திரத்தை எளிமையான முறையில் விண்ணப்பித்து பெறுவது எப்படி என்று இந்த கட்டுரையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
சத்தியவாணி முத்து அம்மையார் நினைவாக மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இந்த திட்டத்தை ஏழை எளிய பெண்களுக்கு பயன்படும் விதமாக இந்த திட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டது இதன் மூலம் தமிழகத்தில் பல ஏழை பெண்கள் பயன் பெற்று வருகின்றனர்.
இந்த திட்டத்தில் யாரெல்லாம் பயன்பெற முடியும் என்று பார்க்கலாம் வாங்க :
ஆதரவற்ற பெண்கள் / விதவைகள்,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளியான ஆண்கள் மற்றும் பெண்கள், சமூகத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சமூக நலனை கருதி அவர்களுடைய வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
இந்தத் திட்டத்திற்கான தகுதிகள் :
1. குடும்ப ஆண்டு வருமானம் 72,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
2. கல்வித் தகுதி எதுவும் தேவையில்லை.
3. 20 வயது முதல் 40 வயது வரை இருக்க வேண்டும்.
4. தையல் தெரிந்திருக்க வேண்டும்.
5. முக்கியமாக தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
6. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள படி இவை அனைத்திற்கும் தகுதி உடையவர் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் இதற்கான சான்று கட்டாயம் தேவை.
2. வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்களுக்கான சான்று.
3. குடும்ப வருமான சான்று.
4. தைக்க தெரிந்தவரா என்பதற்கான சான்று.
5. வயது சான்று (இதற்கு ஆதார் அட்டையை இணைக்கலாம்.)
இவை அனைத்தையும் சரியாக உள்ளதா என்பதை அறிந்துகொண்டு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை டவுன்லோட் செய்து பூர்த்தி செய்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உங்கள் மாவட்டத்திலுள்ள சமூக நலத்துறை அல்லது வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் அவர்களிடம் தபால் மூலமாகவோ அல்லது பதிவு தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சென்று விண்ணப்பிக்கலாம்.
இத்திட்டம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் கொண்டு சேர்க்கவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்